/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஹார்விபட்டி பூங்காவிற்கு வெளிச்சம் கிடைக்குமா
/
ஹார்விபட்டி பூங்காவிற்கு வெளிச்சம் கிடைக்குமா
ADDED : அக் 13, 2024 04:56 AM
திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி பூங்காவில் மாநகராட்சி நிதி மூலம் பல்வேறு சீரமைப்பு பணி நடக்கிறது. அங்கு சிமென்ட் பெஞ்சுகள், செயற்கை நீரூற்று, சிறுவர் விளையாட்டு சாதனங்கள், நடைமேடை சீரமைப்பு, சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. மற்ற பணிகளையும் விரைவில் முடிக்க வேண்டும்.
பூங்காவிற்குள் விளக்குகள் எரிவதில்லை. இரவில் நடை மேடையில் நடைபயிற்சி செல்வோர், பூங்காவை கடந்து செல்லும் பெண்கள் சிரமப்படுகின்றனர். கழிப்பறை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இருபக்க கேட்டுகளும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இப்பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.