sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 25, 2026 ,பங்குனி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பிப்., 28ல் திறக்கிறார் மோடி?

/

 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பிப்., 28ல் திறக்கிறார் மோடி?

 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பிப்., 28ல் திறக்கிறார் மோடி?

 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பிப்., 28ல் திறக்கிறார் மோடி?

1


ADDED : பிப் 06, 2026 07:14 AM

Google News

ADDED : பிப் 06, 2026 07:14 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க பிப்., 28ல் மதுரை வரும் பிரதமர் மோடி, மதுரை, தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற உள்ளன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர்கள் சேர்க்கை நான்காண்டுகளாக நடத்தப்பட்டு, தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரியில், 200 மாணவர்கள் படிக்கின்றனர்.

இம்மாணவர்கள் மார்ச் முதல், மதுரை எய்ம்ஸ் வளாகத்தில் தங்கி படிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிப்., 28ல் பா.ஜ., தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க மதுரை வரும் பிரதமர் மோடி, தனி நிகழ்ச்சியில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற உள்ளன.

அதேபோல, தமிழகத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 3,147 கோடி ரூபாயில், 77 ரயில்வே ஸ்டேஷன்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இதில், ராமேஸ்வரம் உட்பட, 18 ஸ்டேஷன்களில் பணிகள் முடிந்துள்ளன. இந்த ஸ்டேஷன்களை திறந்து வைத்து, சென்னை - ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயில் சேவையையும், பிரதமர் மோடி துவக்கி வைப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பணி நிறைவு எப்போது?

முதற்கட்ட கட்டுமானம், 18 மாதங்களில் நிறைவடைந்த நிலையில், மொத்த கட்டுமான பணிகளும் அடுத்த, 15 மாதங்களில் முடிக்கப்படும். மொத்தம், 2 லட்சத்து 31,782 சதுர மீட்டர் பரப்பளவில், 42 பிரிவு கட்டடங்களாக கட்டுமானம் நடைபெறும். தொற்று நோய் பிரிவுக்கான 150 படுக்கை, ஆயுஷ் பிரிவுக்கான 30 படுக்கை உட்பட 900 படுக்கைகள் அமைக்கப்படும். தினமும் 5,000 வெளிநோயாளிகள் சிகிச்சை பெறலாம். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஆசிரியர் உட்பட 200 பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வளாகத்தில் உயர் தரமான மருத்துவ சிகிச்சை, மருத்துவ கல்வியுடன் புதிய ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.



ஜூனில் புறநோயாளி பிரிவு துவக்கம்

மதுரை, எய்ம்ஸ் இயக்குநர் அனுமந்த ராவ் கூறியதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி திட்டமிட்டபடி நடந்து வருகிறது. பாதாள சாக்கடை மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு போன்றவற்றுக்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் பயிலும், மதுரை எய்ம்ஸ் நான்காம் ஆண்டு மாணவர்கள், இரண்டு பேட்ச்களையும் மார்ச்சில் மதுரைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம். அவர்களுக்கு வகுப்பறைகள், மாணவ, மாணவியர் விடுதிகள் தயாராக இருக்கும். ஜூனில் புறநோயாளி பிரிவு தயாராகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us