sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் யூனிட் அமைக்க 'ஆக்சிஜன்' தரும் மரங்கள் அகற்றமா

/

மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் யூனிட் அமைக்க 'ஆக்சிஜன்' தரும் மரங்கள் அகற்றமா

மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் யூனிட் அமைக்க 'ஆக்சிஜன்' தரும் மரங்கள் அகற்றமா

மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் யூனிட் அமைக்க 'ஆக்சிஜன்' தரும் மரங்கள் அகற்றமா


ADDED : ஆக 07, 2025 04:57 AM

Google News

ADDED : ஆக 07, 2025 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் கூடுதலாக 10 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் யூனிட் அமைக்க குழந்தைகள் நலப்பிரிவை ஒட்டிய பூங்காவில் உள்ள மரங்களை அகற்ற மருத்துமவனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

குழந்தைகள் நல வார்டு எதிரில் உள்ள காலியிடத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள ஆக்சிஜன் யூனிட் தற்போது செயல்படுகிறது. கூடுதலாக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள சிலிண்டர் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே யூனிட் செயல்படும் இடத்தில் போதுமான இடவசதி இல்லாததால் குழந்தைகள் நலவார்டு பூங்காவின் ஒரு பாதியை பயன்படுத்த மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே புற்றுநோய் வார்டு முன்புறமிருந்த 50 ஆண்டு பழமையான மரத்தை தரைப்பகுதியில் உள்ள தண்ணீர் குழாயை சரிசெய்வதற்காக வெட்டி அப்புறப்படுத்தி விட்டனர். இப்போதும் இங்குள்ள மரங்களை வெட்டினால் மருத்துவமனையில் மரங்களே இருக்காது என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனனர்.

டீன் அருள் சுந்தரேஷ்குமார், மயக்கவியல் மற்றும் வலி நீக்கியல் துறைத்தலைவர் கல்யாணசுந்தரம் கூறியதாவது: பழைய இடத்தில் ஐநாக்ஸ் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட சிலிண்டருக்கான டெண்டர் காலக்கெடு ஆகஸ்டுடன் முடிகிறது. தமிழ்நாடு மருந்து சேவை கழகம் மூலம் புதிதாக 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள ஆக்சிஜன் யூனிட் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதனால் மருத்துவமனையில் நோயாளிகளுக்கான மூன்று நாட்கள் ஆக்சிஜன் தேவையை இருப்பு வைக்க முடியும்.

பழைய யூனிட் உள்ள இடத்தில் அதை விட இரண்டு மடங்கு அளவுள்ள சிலிண்டரை நிறுவுவதற்கு அங்கு போதுமான இடமில்லை. எனவே பூங்காவின் ஒரு பகுதியை தேர்வு செய்துள்ளோம். அதிலுள்ள குழந்தைகளுக்கான விளையாட்டு கருவிகளையோ முன்புறம் வளர்ந்துள்ள பழைய வேப்பமரத்தையோ அகற்றவில்லை. சிறிதாக உள்ள லட்சக்கோட்டை மரம், நொச்சிமரங்கள், பெரிய நெட்டிலிங்க மரத்தை அகற்ற பொதுப்பணித்துறை மூலம் திட்டமிட்டுள்ளோம். பெரிய மரங்களை வெட்டும் எண்ணமில்லை. 2.2 மீட்டர் விட்டத்தில் சிலிண்டர் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு சிலிண்டர் நிறுவப்படும். அதற்காக வேப்பமரக் கிளைகளும் பூங்காவிலுள்ள பெரிய மரத்தின் கிளைகள் மட்டும் வெட்டப்படும். சிலிண்டரை நிறுவிய பின் கிளைகள் அதன் மேல் படர்ந்தாலும் பாதிப்பில்லை. பழைய யூனிட் உள்ள இடத்திற்கு அருகிலேயே பூங்கா பகுதி இருப்பதால் பைப் லைன் பதிப்பதற்கு கூடுதல் செலவாகாது. உடனடியாக பைப்லைனை புதுப்பித்து செயல்படுத்தமுடியும் என்றனர்.






      Dinamalar
      Follow us