/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ரூ.300 கோடி மதிப்புள்ள கட்டடங்கள் தேர்தல் அறிவிப்புக்குள் திறக்கப்படுமா

ADDED : பிப் 13, 2024 04:56 AM
மதுரை, : மதுரை அரசு மருத்துவமனைக்குட்பட்ட ரூ. 300 கோடி மதிப்பிலான கட்டடங்கள் திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.
இம்மருத்துவமனையில்ஜெயிக்கா பன்னாட்டு நிறுவன நிதியின் கீழ் ரூ.250 கோடி மதிப்பிலான அறுவை சிகிச்சை தியேட்டர் வளாகங்கள் கட்டுமான பணி முடிந்துள்ளது.
மகப்பேறு அரங்க வளாகத்தில் நோயாளிகளின் உறவினர்களுக்கான காத்திருப்பு அறை, நெஞ்சகப்பிரிவு நோயாளிகளுக்கான புதிய கட்டடம், அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் ஆடிட்டோரியம், விலங்குகளை வைத்து பரிசோதனை செய்யும் உயர்தர ஆய்வகம், மதுரை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் சிறுநீரக கல் உடைக்கும் புதிய கருவியும் புதிய பயன்பாட்டுக்காக காத்திருக்கிறது.
மேலும் தோப்பூர் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட சிறப்பு தொற்று நோய் பிரிவு மருத்துவமனை கட்டுமான பணியும் முடிவடைந்துள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்கள் அடுத்து 2 மாதங்கள் வரை திறப்பு விழாவுக்கு காத்திருக்க நேரிடும் என்பதால் மருத்துவமனை நிர்வாகம் தாமதமின்றி கட்டடங்களை திறந்து நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.