ADDED : ஜூலை 19, 2026 01:02 AM

அ நிறம் | அளவு
சோழவந்தான்: இரும்பாடி ஊராட்சி சின்ன இரும்பாடியில் ஆபத்தான நிழற்குடையை அகற்றி புதிதாக அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்குள்ள அங்கன்வாடி அருகே பல ஆண்டுகளுக்கு முன் நிழற்குடை கட்டப்பட்டது. வலிமை குறைந்ததாலும் போதுமான பராமரிப்பில்லாததாலும் கட்டடத்தில் பல இடங்களில் விரிசல் விழுந்துள்ளது.
காரை பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இதனால் பயணிகள் வெயில், மழைக்குக் கூட ஒதுங்காமல் அஞ்சி வெளியில் நிற்கின்றனர்.
இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், ''இடித்து அகற்றும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கூடிய விரைவில் சரி செய்யப்படும்'' என்றனர்.
