தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஆபத்தான அங்கன்வாடி சீரமைக்கப்படுமா

ஆபத்தான அங்கன்வாடி சீரமைக்கப்படுமா

ஆபத்தான அங்கன்வாடி சீரமைக்கப்படுமா


UPDATED : நவ 25, 2026 06:24 PM

ADDED : நவ 25, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 06:24 PM ADDED : நவ 25, 2026 06:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவந்தான்: கீழ்நாச்சிகுளத்தில் ஆபத்தான நிலையிலுள்ள அங்கன்வாடியை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

இங்கு காளியம்மன்கோயில் தெருவில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் அங்கன்வாடி செயல்படுகிறது. காலாவதியானதாலும், போதுமான பராமரிப்பு இல்லாததாலும் கட்டடம் சேதமடைந்து மோசமான நிலையிலுள்ளது. சுவரில் 'பெயின்ட்' உரிந்து கருப்பு நிறமாக காட்சியளிக்கிறது. மேலும் பல பகுதிகளில் விரிசல் விழுந்தும், காரை பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விபரீதம் விளைய வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தற்போதும் இங்கு அங்கன்வாடி செயல்படுகிறது. இதனால் பெற்றோர் பலர் குழந்தைகளை மையத்திற்கு அனுப்ப அஞ்சுகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து பழைய கட்டடத்தை அகற்றி புதிதாக அமைக்க வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us