UPDATED : நவ 25, 2026 06:24 PM
ADDED : நவ 25, 2026 06:24 PM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரை சங்கத்தமிழ் காட்சிக்கூடத்தில் சங்கத்தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது. இலக்கிய பேச்சாளர் தேவராஜ பாண்டியன் 'கரிகாலசோழனும், காவிரிபூம்பட்டினமும்' என்ற தலைப்பில் பேசினார்.
அவர் பேசுகையில், கரிகாலசோழன் இலங்கை படையெடுப்பில் பிடித்த போர்க்கைதிகளைக் கொண்டு காவிரியின் கரைகளை உயர்த்தினார். கடல்வழி வணிகத்தை பெருக்கும் வகையில், காவிரிபூம்பட்டினத்தை முக்கிய தலைநகராக மாற்றினார். ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கரிகாலனின் புலிச்சின்னம் முத்திரையிட்டு வரிவசூல் செய்ததை பட்டினப்பாலை விளக்குகிறது என்றார்.
இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் செல்வம் ராமசாமி, அவ்வை மாநகராட்சி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். காட்சிக்கூட விளக்குநர் புஷ்பநாச்சியார் ஒருங்கிணைத்தார்.
