தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/இயற்கை பாதுகாப்பு தினவிழா

இயற்கை பாதுகாப்பு தினவிழா

இயற்கை பாதுகாப்பு தினவிழா


UPDATED : நவ 25, 2026 06:24 PM

ADDED : நவ 25, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 06:24 PM ADDED : நவ 25, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் சுற்றுச்சூழல், கல்வித்துறை, கிரீன் டிரஸ்ட் சார்பில் மதுரைக் கல்லுாரி மேல்நிலைப் பள்ளியில் இயற்கை பாதுகாப்பு தினவிழா தலைமையாசிரியர் பாலாஜிராம் தலைமையில் நடந்தது.

மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல், இயற்கை பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்து பேசினார். இயற்கை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பங்கேற்றோருக்கு டிரஸ்ட் சார்பில் துணிப்பை வழங்கப்பட்டது. வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. உதவி தலைமையாசிரியர்கள் மகேஸ்வரன், வெங்கட சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் குழந்தைவேல் ஏற்பாடு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us