UPDATED : நவ 28, 2026 07:08 PM
ADDED : நவ 28, 2026 07:06 PM

அ நிறம் | அளவு
சோழவந்தான்:
தேனுார் ஊராட்சி தச்சம்பத்தில் மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
இங்கு மதுரை மெயின் ரோட்டருகே 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குளியல்தொட்டியுடன் கூடிய மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பின்றி மோசமாக உள்ளது. இதன் முன் குப்பை குவிக்கப்பட்டு பாதை அடைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் செடி,கொடிகள் அடர்ந்து புதராக மாறிவிட்டது. கதவுகள் துருப்பிடித்து காயம் ஏற்படுத்துகிறது. கட்டடத்தின் பல பகுதிகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உலா வருகின்றன. ஒன்றிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.
