UPDATED : நவ 28, 2026 07:08 PM
ADDED : நவ 28, 2026 07:06 PM
மதுரை: தோட்டக்கலைத் துறை சார்பில் அலங்காநல்லுார் முடுவார்பட்டி கிராம விவசாயிகளை ஒருங்கிணைத்து குழு அமைக்க உள்ளதாக துணை இயக்குநர் பிரபா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் கொய்யா, முருங்கை, வெங்காயம், தக்காளி பயிர்களில் தர மேலாண்மை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 1800 எக்டேரில் கொய்யா சாகுபடியும் அலங்காநல்லுாரில் மட்டும் 1200 எக்டேர் சாகுபடி நடக்கிறது. எனவே முடுவார்பட்டி கிராமத்தில் தலா ஒரு எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யும் 20 விவசாயிகளை ஒருங்கிணைத்து ரூ.61ஆயிரத்து 780மானியம் வழங்கப்படும். வாழைத்தாரில் உரையிட்டு பூச்சி, நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது போல கொய்யா காய்களுக்கும் உரையிட்டு மூடி பாதுகாக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
