/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., பணிகளால் ஆசிரியர்களுக்கு சம்பள சிக்கல் பதிவேற்றம் எளிமைப்படுத்தப்படுமா

ADDED : செப் 05, 2025 03:38 AM
மதுரை:'தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தேவையான பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., பதிவேற்றப் பணிகள்,முழுமை பெறாததால் 4 மாதங்களாக அவர்கள் சம்பளம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
மாநில அளவில் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.
தேவை, கூடுதல் பணியிடங்களில் முதற்கட்டமாக மே மாதம் பி.ஜி., ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதுதொடர்பான விபரங்கள் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,ல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அப்பணிகள் இழுத்தடிக்கப்படுவதால் பணியில் சேர்ந்தும் 4 மாதங்களாக சம்பளமின்றி பணியாற்றுகின்றனர். இப்பணியை மேற்கொள்ள வேண்டிய தனியார் சாப்ட்வேர் கம்பெனி எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் ஆசிரியர்கள் குடும்ப ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியதாவது:
புதிய பணியிடங்கள் உருவாக்கும் போதும் உபரி பணியிடங்களை மாற்றும் போதும் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., என்ற செயலியில் 'போஸ்ட் மேம்பிங்' செய்வது, 'பே ரோல்' மாற்றுவது, 'டிக்கெட் ரெய்ஸ்' செய்வது போன்ற பதிவேற்றப் பணிகள் மிக சிக்கலாக உள்ளன. இதை எளிமைப்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் சம்பந்தப்பட்ட சாப்ட்வேர் நிறுவனம் அதை கண்டுகொள்வதில்லை. ஒவ்வொரு மாதமும் அரசு சம்பளம் விடுவித்தும் அதை பெற சம்பந்தப்பட்ட சாப்ட்வேர் நிறுவனத்திடம் ஆசிரியர்கள் கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வுகாணவில்லை என்றால் விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும் என்றார்.