/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் சமணர் படுக்கைகளை ஒருங்கிணைத்து சுற்றுலா தலமாக மாற்றப்படுமா?
/
மதுரையில் சமணர் படுக்கைகளை ஒருங்கிணைத்து சுற்றுலா தலமாக மாற்றப்படுமா?
மதுரையில் சமணர் படுக்கைகளை ஒருங்கிணைத்து சுற்றுலா தலமாக மாற்றப்படுமா?
மதுரையில் சமணர் படுக்கைகளை ஒருங்கிணைத்து சுற்றுலா தலமாக மாற்றப்படுமா?
ADDED : ஜூலை 16, 2024 05:43 AM

கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, யானைமலை, மாங்குளம், அரிட்டாபட்டி, வரிச்சியூர், கொங்கர் புளியங்குளம் உட்பட 18 சமணர் மலைகள் உள்ளன.
இவற்றில் சமணத்துறவிகள் வாழ்ந்ததற்கான அடையாளமாக மலையின் சுவர்களிலும், செதுக்கப்பட்டுள்ள படுக்கையின் மேற்பகுதி பாறையிலும் தீர்த்தங்கரர் சிலைகள் செதுக்கப்பட்டிருக்கும்.
மலைப்பகுதியில் ஆங்காங்கே நீர்ச்சுனை இருப்பது கூடுதல் சிறப்பு. 2200 ஆண்டுகள் பழமையான சமணர் மலைகளில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
சற்றே கடினமான மலைப்பாதைகளுடன் படிக்கட்டு மூலம் மலைப்பயணம் மேற்கொள்ள விரும்புவோர் குழுவாக செல்கின்றனர். மலை மீதேறி நிற்கும் போது மோதும் காற்றின் சுகம் பயணக்களைப்பை துரத்தி விடும். இவை எல்லாவற்றையும் ஒரே நாளில் பார்வையிட முடியாது. மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து 30 கி.மீ., சுற்றளவில் இவற்றை பார்வையிடலாம்.
பெரும்பாலான மலைகளுக்கு செல்ல பஸ் போக்குவரத்து வசதி உள்ளது. கொங்கர்புளியங்குளத்தில் மண் ரோடு உள்ளது. விரைவில் ரோடு அமைக்கப்பட உள்ளது. மாங்குளத்தில் மீனாட்சிபுரம் பகுதியில் 2 கி.மீ., நீளத்திற்கு ரோடு மோசமாக உள்ளது. அடுத்தடுத்த வழித்தடத்தில் உள்ள மலைகளுக்கு செல்வதற்கு ஏற்ப 'ரூட் மேப்' அமைத்து சுற்றுலா வளர்ச்சி கழகம் மலைப்பயண சுற்றுலாவை அறிவிக்க வேண்டும். பெரும்பாலானோருக்கு ஆர்வம் இருந்தாலும் நேரமின்மை, நிதி மேலாண்மை காரணமாக தொடர்ந்து மலைப்பயணம் மேற்கொள்ள முடிவதில்லை.
ஒரே நாளில் பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து வழித்தடத்திற்கு ஏற்ப 4 அல்லது 5 மலைகளுக்குச் செல்லும் வகையில் சுற்றுலா திட்டமிட்டால் மதுரை மக்களும் வெளிமாநில, வெளிநாட்டு பயணிகளும் ஒருநாள் சுற்றுலாவாக பயன்பெறுவர். அதற்கேற்ப ரோடு வசதியும் செய்ய வேண்டும்.
மதுரை, ஜூலை 16 -
மதுரையில் ஆங்காங்கே மலைகளை குடைந்தும், செதுக்கியும் அமைக்கப்பட்டுள்ள சமணர் மலைக்குன்று, கோயில், சமணர் படுக்கைகளை சுற்றுலா வளர்ச்சி கழகம் ஒருங்கிணைத்து மலைப்பயண சுற்றுலாவாக அறிவிக்க வேண்டும்.

