/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை--புனலுார் விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை இயக்கப்படுமா
/
மதுரை--புனலுார் விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை இயக்கப்படுமா
மதுரை--புனலுார் விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை இயக்கப்படுமா
மதுரை--புனலுார் விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை இயக்கப்படுமா
ADDED : அக் 25, 2025 01:57 AM
ராமநாதபுரம்: மதுரை--புனலுார் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலை, ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ராமநாதபுரம் பயணிகள் நலசங்கத்தினர் கூறியதாவது:
கேரள மாநிலம் புனலுாரில் இருந்து கொல்லம், வர்கலா, திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக மதுரைக்கு தினமும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
புனலுாரில் மாலை 5:15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 3:35 மணிக்கு மதுரை வந்தடையும். மறுமார்க்கமாக மதுரையில் இருந்து இரவு 11:20 மணிக்கு புறப்பட்டு புனலுார் செல்லும்.
இடையில் மதுரையில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதை ராமேஸ்வரம் வரை நீட்டித்து இயக்க வேண்டும். இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு தினசரி ரயில் சேவை கிடைக்கும். மேலும் திருவனந்தபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம், ஏர்வாடி தர்ஹா வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.