/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீர்வரத்து கால்வாயில் செடிகள் அகற்றப்படுமா
/
நீர்வரத்து கால்வாயில் செடிகள் அகற்றப்படுமா
ADDED : நவ 20, 2024 05:27 AM

திருப்பரங்குன்றம் : 'திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் செல்லும் நிலையூர் கால்வாய்களில் உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்' என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
பானாங்குளம் கண்மாய்க்கு வைகை அணை தண்ணீரைக் கொண்டு செல்லும் நிலையூர் கால்வாயில் விளாச்சேரியில் இருந்து ஹார்விபட்டி வரையான பகுதியில் ஆங்காங்கே செடி, கொடிகள் வளர்ந்து நிற்கின்றன.
இவை நீரோட்டத்தை தடுப்பதால் தண்ணீர் வேகமாக செல்ல இயலவில்லை.
வைகை அணையில் தண்ணீர் திறப்பதற்கு முன்பாக நீர்வளத் துறை மூலம் இந்த செடி, கொடிகள் அகற்றப்படுவது வழக்கம். இந்தாண்டு திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கும் விரைவில் தண்ணீர் திறக்கும் நிலை உள்ளது.
அதற்குள் நிலையூர் கால்வாய்களில் உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.