ADDED : ஜன 06, 2026 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
இங்கு அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிழற்குடையை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அதில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள், சிமென்ட் இருக்கைகள், ஜன்னல்கள் பல இடங்களில் சேதமடைந்து காயம் ஏற்படுத்தும் வகையில் உள்ளன. சுவர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சுற்றிலும் செடி, கொடிகள் முளைத்து குப்பையாக காட்சியளிக்கிறது. ஒன்றிய அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.

