ADDED : ஆக 20, 2025 01:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்; சோழவந்தான் காடுபட்டி பகுதியில் செல்லும் தென்கரை கால்வாயை ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன. சித்தாதிபுரத்தில் இருந்து மன்னாடிமங்கலம் வழியாக தென்கரை கண்மாய்க்கு கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது. கால்வாய் மூலம் 3000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கால்வாயில் பல இடங்களில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன.
இதனால் தண்ணீர் சரியாக செல்ல முடியாமல் ஆங்காங்கே அடைப்பு ஏற்படுகின்றன. இவை மதகுகளை அடைத்துக் கொண்டு தண்ணீர் வெளியேறுவதை தடுக்கின்றன. இதனால் போதுமான தண்ணீர் கிடைக்காமல் மகசூல் பாதிக்கும் நிலை உருவாகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வாரி ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.