/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முட்டல், மோதலை கண்டுகொள்ளுமா விளையாட்டுத்துறை: சிலம்பப் போட்டியில் பல்வேறு விதிமுறைகளால் குழப்பம்
/
முட்டல், மோதலை கண்டுகொள்ளுமா விளையாட்டுத்துறை: சிலம்பப் போட்டியில் பல்வேறு விதிமுறைகளால் குழப்பம்
முட்டல், மோதலை கண்டுகொள்ளுமா விளையாட்டுத்துறை: சிலம்பப் போட்டியில் பல்வேறு விதிமுறைகளால் குழப்பம்
முட்டல், மோதலை கண்டுகொள்ளுமா விளையாட்டுத்துறை: சிலம்பப் போட்டியில் பல்வேறு விதிமுறைகளால் குழப்பம்
ADDED : செப் 06, 2025 04:27 AM

மதுரை: பள்ளிக்கல்வித்துறை மூலம் மாநில அளவிலும் எஸ்.ஜி.எப்.ஐ., எனப்படும் தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் மூலம் மத்திய அரசின் தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் சிலம்பம் இடம்பெறுகிறது. ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிக்கும் குறிப்பிட்ட விதிமுறைகள் உலகளவில் ஒரே மாதிரியாக பின்பற்றப்படுகிறது.
உதாரணமாக கால்பந்து போட்டியில் 'பெனால்டி கிக்' என்றால் உலகளவில் அதற்கு ஒரே அர்த்தம் தான் எடுத்துக் கொள்ளப்படும். சிலம்ப விளையாட்டுக்கென தமிழக அளவில் ஒரே விதமான விதிமுறை முழுமையாக இல்லை.
பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் ஒரு விதமான சிலம்ப விதிமுறைகளை மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர். சங்கங்கள் மூலம் பயிற்சியாளர்களும் பரம்பரை பரம்பரையாக சிலம்பாட்ட பயிற்சி கற்றுத் தருபவர்கள் வேறு விதமாகவும் விதிமுறைகளை கற்றுத் தருகின்றனர்.
இதனால் மாணவர்கள் தான் போட்டியின் போது பாதிக்கப்படுகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பிலும் முதல்வர் கோப்பைக்கான சிலம்பப் போட்டி நடத்தும் போதும் உடற்கல்வி ஆசிரியர்கள், சங்கங்கள் இடையே எந்த விதிமுறையை பின்பற்றுவது என்பதில் அடிக்கடி முட்டல், மோதல் ஏற்படுகிறது.
இதனால் பல மணி நேரம் போட்டி நிறுத்தப்படுகிறது அல்லது வேறொரு நாளுக்கு மாற்றப்படுவதால் அவதிப்படுவது மாணவர்கள் தான்.
இதை தவிர்க்க வேண்டும் எனில், விளையாட்டுத்துறை சார்பில் தகுதிவாய்ந்த சிலம்ப ஆசிரியர்கள் மூலம் புதிதாக விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
அந்த விதிமுறைகளை அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு கற்றுத் தருவதோடு நடுவர்களுக்கான சிறப்பு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்க வேண்டும்.
இதன் மூலம் பள்ளிக்கல்வித்துறை நடத்தும் சிலம்பப் போட்டிகளில் பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கலாம். மேலும் அங்கீகாரம் இல்லாத சிலம்ப சங்கங்களின் பட்டியலை வெளியிட்டு மாணவர்களின் பெற்றோர்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.