UPDATED : நவ 19, 2026 05:28 PM
ADDED : நவ 19, 2026 05:22 PM
திருப்பரங்குன்றம்:
வேடர் புளியங்குளம் தென்பழஞ்சி வடபழஞ்சி கண்மாய்கள் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் பாண்டி கூறியதாவது: திருப்பரங்குன்றம் தாலுகா தென்பழஞ்சி ஊருணிகளை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் துார்வாரக்கோரி ஊராட்சி ஒன்றியத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல ஊருணிகளில் செடி, கொடிகள், கருவேல் மரங்கள் வளர்ந்து கிடக்கின்றன. நீர் வரத்து கால்வாய்களில் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் ஊருணிகளில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது.
அனைத்து ஊருணிகளையும் 100 நாள் திட்ட பணியாளர்கள் மூலம் முழுமையாக துார்வாரி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் சீராக வைத்திருக்க உதவும். கிராமங்களில் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படாது என்றார்.
