/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விவசாய நிலங்களுக்கு செல்ல பாலம் அமையுமா
/
விவசாய நிலங்களுக்கு செல்ல பாலம் அமையுமா
ADDED : செப் 02, 2025 05:29 AM

சோழவந்தான் : 'சோழவந்தான் அருகே நரியம்பட்டியில் விவசாய நிலங்களுக்கு செல்ல பாலம் அமைக்க வேண்டும்' என அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
அப்பகுதி விவசாயி பூமிநாதன்: அணைப்பட்டியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் திருமங்கலம் கால்வாய், நரியம்பட்டி விவசாய நிலங்களிடையே செல்கிறது. பல ஏக்கர் நிலங்கள் கால்வாயின் மறுபுறம் உள்ளன.
இதனால் விவசாயிகள் கால்வாயில் இறங்கி தங்கள் நிலங்களுக்குச் செல்லும் நிலை உள்ளது.
பாசன காலங்களில் கால்வாயில் தண்ணீர் செல்வதால் ஆபத்தான வகையில் கால்வாயை கடக்க வேண்டியுள்ளது. மழை மற்றும் அறுவடை காலங்களில் விவசாயிகள் அதிக சிரமங்களை சந்திக்கின்றனர். மம்பட்டி வழியாக 4 கி.மீ., சுற்றிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. இங்குள்ள படித்துறை அருகே சிறிய பாலம் அமைத்து தர பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.