sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குழாயில வருமா தண்ணீரு: பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் முடிவது எப்போது

/

குழாயில வருமா தண்ணீரு: பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் முடிவது எப்போது

குழாயில வருமா தண்ணீரு: பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் முடிவது எப்போது

குழாயில வருமா தண்ணீரு: பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் முடிவது எப்போது


ADDED : மார் 08, 2024 01:08 AM

Google News

ADDED : மார் 08, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: கோடை வெயில் தாக்கம் அதிகரித்து விட்டதால் மதுரையின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பெரியாறு கூட்டுக்குடிநீர் வினியோக பணிகளை மாநகராட்சி விரைவுபடுத்த வேண்டும். அடுத்த மாதம் சித்திரை திருவிழா துவங்கவுள்ளதால் குடிநீர் தேவை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சியில் உள்ள 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 371 எம்.எல்.டி., குடிநீர் தேவை. தற்போது வைகை அணை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டங்களில் இருந்து 192 எம்.எல்.டி., குடிநீர் மட்டும் பெறப்படுகிறது. பற்றாக்குறையை போக்க 'அம்ரூத் 3' திட்டத்தில் ரூ.1685.76 கோடியில் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

ஆனாலும் மதுரை வார்டுகளில் குழிகள் தோண்டி குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடர்வதால் வினியோகம் தாமதமாகுமா என சந்தேகம் எழுந்துள்ளது. சட்டசபையில் அமைச்சர் நேரு '2023 டிசம்பரில் குடிநீர் வினியோகம் துவங்கும்' என அறிவித்தார். ஆனால் நடக்கவில்லை.

மாநகராட்சி கூட்டங்களில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பும்போதெல்லாம் 'ஜனவரியில் வரும்... பிப்ரவரியில் வந்துவிடும்' என மேயர், கமிஷனர் பதில் அளிக்கின்றனர். ஆனாலும் வார்டுகளில் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்தபாடில்லை. அதன்பின் மீட்டர் பொருத்துவது உள்ளிட்ட பணிகள் வேறு உள்ளன. கோடையில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க இத்திட்டத்தில் வினியோகம் நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் தடுப்பணை, ஆற்று நீரேற்று நிலையம் அமைத்தல், பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையம் வரை 96 கி.மீ. நீளத்திற்கு சுத்திகரிக்கப்படாத குடிநீர் பிரதான குழாய் பதித்தல், பண்ணைப்பட்டி 125 எம்.எல்.டி. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், பண்ணைப்பட்டியிலிருந்து மதுரை வரை 55.44 கி.மீ. நீளத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிரதான குழாய் பதித்தல், 37 குடிநீர் மேல்நிலை, தரைமட்ட தொட்டி கட்டுதல் பணிகள் நிறைவடைந்துள்ளன.

பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையத்தில் நீரில் கலந்துள்ள இரும்பு தாதுக்களை அகற்றுதல், பெரிய துகள்களை வடிகட்டுதல், குளோரின் கலக்குதல், தரைமட்ட தொட்டியிலிருந்து (சம்ப்) 1400 எம்.எஸ்., குழாய் வழியாக மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகளை ஆய்வு செய்து விரைவுபடுத்த மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் உத்தரவிட்டுள்ளனர்.

கோடையில் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.






      Dinamalar
      Follow us