ADDED : நவ 26, 2024 05:23 AM
மதுரை: 'திருமங்கலத்தில் முக்கிய ரயில்கள் நிற்க பரிசீலிப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார்' என ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
திருமங்கலம் வழியாக சென்னைக்கு தினமும் 9 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதில் அனந்தபுரி (20636/20635), முத்துநகர் (12694/12693) ரயில்கள் மட்டுமே திருமங்கலத்தில் நின்று செல்கின்றன. திருமங்கலத்தில் இருந்து அனந்தபுரி இரவு 9:11 மணிக்கும், முத்துநகர் இரவு 10:30 மணிக்கும் சென்னை செல்கின்றன.
மறுமார்க்கத்தில் முத்துநகர் அதிகாலை 3:27 மணிக்கும், அனந்தபுரி அதிகாலை 3:44 மணிக்கும் திருமங்கலம் வருகின்றன.
அதிகாலை நேரம் என்பதால் திருமங்கலத்தில் இறங்கும் பயணிகளுக்கும், அதை தாண்டி பயணிப்போருக்கும் அசவுகரியம் ஏற்படுகிறது. எனவே இதற்குப் பதிலாக பொதிகை விரைவு ரயிலுக்கு நிறுத்தம் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
இதுகுறித்து ரயில்வே அமைச்சரை சந்தித்தபின் வைகோ கூறுகையில்,
''திருமங்கலத்தில் பொதிகை, குருவாயூர், திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில்கள் நிற்க வலியுறுத்தினேன். பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்'' என்றார்.

