/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரைக்கு வருமா துாங்கும் வசதியுடைய 'வந்தே பாரத்'
/
மதுரைக்கு வருமா துாங்கும் வசதியுடைய 'வந்தே பாரத்'
மதுரைக்கு வருமா துாங்கும் வசதியுடைய 'வந்தே பாரத்'
மதுரைக்கு வருமா துாங்கும் வசதியுடைய 'வந்தே பாரத்'
ADDED : நவ 05, 2024 05:33 AM

மதுரை: புதிதாக வடிவமைக்கப்படவுள்ள படுக்கை வசதியுடைய வந்தே பாரத் ரயில்களில் ஒன்றை மதுரை வழியாக ராமேஸ்வரம் - ஐதராபாத் இடையே இயக்க தென்னக ரயில்வே பயணிகள் சங்கம் சார்பில் தெற்கு ரயில்வே, தெற்கு மத்திய ரயில்வேகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு இடையே நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவை சென்னை ஐ.சி.எப்., தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. அதில் ஏ.சி., சேர்கார் பெட்டிகள் மட்டுமே உள்ளன. தற்போது படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை ஐ.சி.எப்., உடன் இணைந்து பெங்களூருவில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் (பி.இ.எம்.எல்.,) தயாரிக்கிறது.
16 பெட்டிகள் கொண்ட இதில் 11 பெட்டிகள் ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதியுடனும், 4 ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதியுடனும், ஒரு ஏ.சி., முதல் வகுப்பு பெட்டியுடனும் வடிவமைக்கப்படவுள்ளன. ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுவதை தவிர்க்க 'கவாச்' கருவி, சி.சி.டி.வி., உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்படவுள்ளன. 'அடுத்த 3 மாதங்களில் இத்தகைய ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும்' என கடந்த மாதம் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இதுகுறித்து சங்கப் பொதுச் செயலாளர் பத்மநாதன் கூறுகையில், 'துாங்கும் வசதியுடைய வந்தே பாரத் ரயில்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.
இவ்வகை ரயில்களை தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வழியாக தெலுங்கானாவின் ஐதராபாத்திற்கு இயக்கினால் ஆன்மிக சுற்றுலா செல்வோர், தொழில்முனைவோர், மென்பொறியாளர்கள், வியாபாரிகள் பெரிதும் பயனடைவர்' என்றார்.