/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்னும் 10 ஆண்டுக்கு இழுப்பீர்களா? சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி காட்டம்
/
இன்னும் 10 ஆண்டுக்கு இழுப்பீர்களா? சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி காட்டம்
இன்னும் 10 ஆண்டுக்கு இழுப்பீர்களா? சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி காட்டம்
இன்னும் 10 ஆண்டுக்கு இழுப்பீர்களா? சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி காட்டம்
ADDED : நவ 13, 2025 02:12 AM
மதுரை: 'சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், இன்னும், 10 ஆண்டுகளுக்கு வழக்கை இழுத்தடிப்பீர்களா?' என, சி.பி.ஐ., மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பினார்.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை போலீசார், 2020 ஜூன், 19ல் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியதில், இருவரும் இறந்தனர்.
இதில், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட, 9 போலீசார் மீது சி.பி.ஐ., கொலை வழக்கு பதிந்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
அந்நீதிமன்றம் விசாரணையை முடிக்க பலமுறை உயர் நீதிமன்றம் கால நீட்டிப்பு வழங்கியது. மேலும், ஆறு மாதங்கள் கால நீட்டிப்புகோரி அந்நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது.
நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார்.
சி.பி.ஐ., தரப்பு, 'கூட்டுச்சதி குற்றச்சாட்டை சேர்க்க அனுமதி கோரி கீழமை நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. 52 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்' என, தெரிவித்தது.
நீதிபதி, 'சி.பி.ஐ., மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கூட்டு சேர்ந்து இன்னும், 10 ஆண்டுகளுக்கு வழக்கை இழுத்தடிக்க முயற்சிக்கிறீர்களா?' என, காட்டமாக கேள்வி எழுப்பினார்.
பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'கூட்டு சதி குற்றச்சாட்டை சேர்க்க மற்றும் சாட்சிகளிடம் மறு விசாரணை செய்ய குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் தரப்பில், கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
'இம்மனுக்கள் மீது, நவ., 25க்குள் கீழமை நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். விசாரணை நவ., 26க்கு ஒத்திவைக்கப்படுகிறது' என்றார்.

