/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேராசிரியர்களுக்கு வழங்காமல் ரூ. பல லட்சம் இழுத்தடிப்பு; விடைத்தாள் திருத்தியத்திற்கான மதிப்பூதியம்

ADDED : ஜன 16, 2024 06:15 AM

மதுரை,: மதுரை காமராஜ் பல்கலையில் கல்லுாரிகளின் பருவத்தேர்வு விடைத்தாள் திருத்தியதற்காக பேராசிரியர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.பல லட்சம் மதிப்பூதியத்தை வழங்காமல் பல்கலை இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இப்பல்கலைக்கு உட்பட்டு 90க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. இளங்கலை, முதுகலை பாடப் பிரிவுகளுக்காக 2023 ஏப்ரலில் நடந்த பருவத் தேர்வுகளின் விடைத்தாள்கள் பல்கலையில் மதிப்பீடு செய்யப்பட்டது. இதற்காக கல்லுாரிகளில் சீனியாரிட்டி அடிப்படையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட உதவி, இணை பேராசிரியர்கள் மதிப்பீடு பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு பல்கலை சார்பில் ஒரு இளங்கலை விடைத்தாளுக்கு ரூ. 12, முதுகலை விடைத்தாளுக்கு ரூ. 15 வீதம் மதிப்பீடு செய்தவர்களுக்கு பல்கலை சார்பில் மதிப்பூதியம் வழங்கப்படும். ஆனால் இதுவரை மதிப்பூதியம் வழங்காமல் பல்கலை இழுத்தடித்து வருகிறது.
பேராசிரியர்கள் கூறியதாவது: மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தேர்வு கட்டணத்தில் இருந்து தான் பல்கலை இந்த மதிப்பூதியத்தை வழங்குகிறது. தேர்வு கட்டணத்தை பல மடங்கு உயர்த்திய நிலையிலும் மதிப்பூதியம் மட்டும் பல ஆண்டுகளாக அதே நிலையில் தான் உள்ளது. 9 மாதங்களுக்கு மேலாகியும் வழங்கப்படவில்லை. இதுதவிர பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட சில பாடப் பிரிவுகளின் விடைத்தாள்கள் ஆன்லைனில் பேராசிரியர்கள் திருத்தினர். அதற்கும் மதிப்பூதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் 2023, நவ., விடைத்தாள் திருத்தும் பணியும் துவங்கிவிட்டது. பல்கலை நிதிச்சூழலை காரணம் காட்டி மதிப்பூதியத்தை நிறுத்தி வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றனர்.