sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காதலின்றி மண்ணில் உயிர்கள் இல்லை மனதில் உயிர் இல்லை காதலில் வென்றவர்களின் கதை கேட்போமா

/

காதலின்றி மண்ணில் உயிர்கள் இல்லை மனதில் உயிர் இல்லை காதலில் வென்றவர்களின் கதை கேட்போமா

காதலின்றி மண்ணில் உயிர்கள் இல்லை மனதில் உயிர் இல்லை காதலில் வென்றவர்களின் கதை கேட்போமா

காதலின்றி மண்ணில் உயிர்கள் இல்லை மனதில் உயிர் இல்லை காதலில் வென்றவர்களின் கதை கேட்போமா


ADDED : பிப் 14, 2024 05:52 AM

Google News

ADDED : பிப் 14, 2024 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காதல்... மனித மனங்களை கனிவோடும், கருணையோடும் கட்டிக்காக்கும் மனதின் கண்டுபிடிப்பு. இந்த காதல்... கற்பனைகளை வளர்க்கும்; கவலையையும் தரும். மகிழ்ச்சியை மலர வைக்கும்; வாழ்வை கொண்டாட வைக்கும். வைராக்கியத்தை தரும்; வெற்றியை வசமாக்கும்.இந்த காதலின்றி மண்ணில் உயிர்கள் இல்லை; மனதில் உயிர் இல்லை.உலகில் தோன்றிய 'முதல் காதல்' முதல் இந்த வினாடி காதல் வரை, வென்றிடத்தான் அரும்புகிறது. அப்படி காதலில் வென்றவர்களை, கல்யாணம் கண்டு அன்பை கொண்டாடுபவர்களை கண்டு கொண்டு அவர்களிடம் காதல் கதை கேட்டால் என்ன... காதல் தம்பதியினர் சொல்கிறார்கள்...

நீ தானா... அந்த குயில்

'புற அழகை பார்த்து காதல் வரும். குணத்தையும் அன்பையும் பார்த்து காதல் வருவது அதிசயமான விஷயம். அந்த அதிசயம் எங்கள் வாழ்விலும் நடந்தது' என்கின்றனர் மதுரையை சேர்ந்த ஆனந்த் பாபு, காமாட்சி தம்பதியினர்.

ஆனந்த் பாபு கூறியது: காமாட்சி தையல் வேலையுடன் ஜவுளிக்கடை வைத்திருக்கிறார். நான் தனியார் பள்ளி ஆசிரியர். எங்கள் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்காக காமாட்சி அடிக்கடி வந்து செல்வார். அவர் வரும்போது நான் மாணவிகளிடம் நடந்து கொள்ளும் அணுகுமுறை, பேச்சு ஆகியவற்றை கவனித்துக் கொண்டு இருந்திருக்கிறார். ஒரு முறை கூட என்னிடம் பேசியது இல்லை.

கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அவரும் சீருடை வழங்க வரவில்லை. கொரோனா முடிந்து பள்ளி துவங்கிய போது சீருடை கொடுக்க வந்தார். நான் படியில் இருந்து இறங்கி வந்த போது எதிரே வந்து முதல்முறையாக என்னிடம் பேசினார். அவரது முதல் கேள்வியே, ' சார் உங்களுக்கு எத்தனை பசங்க' என்றுதான். 'இன்னும் திருமணம் ஆகவில்லை' என்றதும் 'நல்ல பெண்ணாக பார்த்து சொல்லட்டுமா' என்றார். சரி என்றதும் அலைபேசி எண்ணை பரிமாறிக் கொண்டோம். மூன்றாம் நாளில், ' நீங்கள் தான் அந்த பெண்ணா' என்று கேட்டேன். ஆமாம் என்றார்.

ஒரு வயது வரை நன்றாக இருந்து போலியோவால் பாதிக்கப்பட்டவன் நான். இந்த நிலையில் காமாட்சி என்னை ஆறாண்டுகளாக காதலித்தாள் என்று சொல்லும் போது வானத்தில் பறப்பது போல இருந்தது. இருவருக்குமே பெற்றோர் இல்லை, உறவு வழியில் சகோதர சகோதரிகள் இருந்தனர். அனைவரது சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்தோம். ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. எதை பார்த்து என்னை விரும்பினாய் என்று கேட்டேன். 'உங்கள் நல்ல மனசை பார்த்து' என்றார். இதற்காகத்தான் இவ்வளவு ஆண்டுகள் நான் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்தேனோ என்று எனக்குத் தோன்றியது.

சாதிக்க வைக்கும் காதல்

'உண்மைக் காதல் சாதிக்க வைக்கும். இன்பத்திலும், துன்பத்திலும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாக இருந்தால் அந்த காதல் வெல்லும்' என்கின்றனர் மதுரையை சேர்ந்த ராமநாதனும், கல்யாணியும்.

ராமநாதன் கூறியது: மனைவி மகாராஷ்டிராவை சேர்ந்தவர். புனேயில் பி.இ., படிக்கும் போது 2002ல் காதல் ஏற்பட்டது.நான் தான் காதலை வெளிப்படுத்தினேன். உடனே சம்மதமும் கிடைத்தது. ஒருத்தரை ஒருத்தர் நன்றாக புரிந்துகொண்டோம். காதல், எங்கள் வாழ்க்கையின் வளர்ச்சிக்கானதாக அமைந்தது. படிக்கும் போது 'யுனிவர்சிட்டி பர்ஸ்ட் ஆக வா. உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்' என காதலி சொன்னார். அதேபோல் 'பர்ஸ்ட்' ஆக வந்தேன். கல்யாணம் கைகூடியது.

அவருக்கு தமிழ் தெரியவில்லை. எப்படி தமிழக மருமகளாக இருக்க போகிறார் என அவரின் பெற்றோர் கொஞ்சம் தயங்கினர். எங்கள் வீட்டிற்கு வந்து பார்த்தவுடன் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். ஒன்பது ஆண்டுகள் காதலித்த பின்பு திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தோம். உண்மைக் காதல் வாழ்வின் உச்சத்திற்கு கொண்டு செல்லும். வெற்றியை தரும்.






      Dinamalar
      Follow us