/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புதிய தார் சாலையில் புல் முளைத்த அவலம்
/
புதிய தார் சாலையில் புல் முளைத்த அவலம்
ADDED : பிப் 15, 2024 05:45 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே கணேசபுரம் பகுதியில் புதிதாக அமைத்த தார் ரோட்டில் புல் முளைத்ததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கருப்பட்டியில் இருந்து கணேசபுரம் பொட்டமடை வரை 690 மீ., சாலை முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் அமைக்கப்பட்டது. ரூ.14.8 லட்சத்தில் புதிதாக சாலை அமைத்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இந்த ரோட்டில் புற்கள் அதிகளவில் முளைத்து வருகிறது. தார் சாலையின் இரு ஓரங்களில் உள்ள வெள்ளை கோடுகளை கடந்து புல் வளர்ந்து வருவதால் தரமற்ற முறையில் உரிய கனமின்றி மெலிதாக சாலை அமைத்துள்ளதாக கிராமமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாலையின் இருபுறமும் பாசன ஓடை, வயல்கள் இருப்பதால் புல் வளர்ந்துள்ளது. புற்களை அகற்றி சாலை சரிசெய்து தரப்படும் என வாடிப்பட்டி ஒன்றிய அதிகாரிகள் விளக்கம் தருகின்றனர்.

