
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் முள்ளிபள்ளம் கூலித் தொழிலாளி கணேசன் 45. ஒரு மகள், மகன் உள்ளனர். இவர் அதேபகுதியைச் சேர்ந்த 2 மகன்கள் உள்ள பெண்ணுடன் 3 ஆண்டுகளாக தொடர்பில் இருந்தார். இதை அப்பகுதியினர் கண்டித்தனர். டிச.12ல் கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் கணேசன் இறந்து கிடந்தார். காடுபட்டி போலீசார் விசாரித்தனர்.
கணேசன் பழகி வந்த அப்பகுதி மாரிமுத்து மனைவி பாண்டியம்மாள் 35, இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கணேசனை கொலை செய்தது தெரிந்தது. பாண்டியம்மாளை போலீசார் கைது செய்தனர்.