ADDED : ஜூன் 05, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் ஜவகர் நகர் 3வது தெருவை சேர்ந்த உமேஷ் குமார் 26. இவரது மனைவி நளினி 24. இருவரும் மதுரை தனியார் ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நளினியை பெற்றோர் திருமங்கலம் பஸ்ஸ்டாண்டிற்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக நேற்று காலை சேர்த்தனர். மதியம் 1:30 மணிக்கு ஆப்பரேஷன் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ரத்தப்போக்கு அதிகமானதால் மதியம் 3:30 மணிக்கு நளினியை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.