ADDED : அக் 12, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : உசிலம்பட்டி கிருஷ்ணாபுரத்தில் இருந்து திருமங்கலம் பச்சைகோப்பன்பட்டிக்கு செங்கல் லாரியை நாகமலை புதுக்கோட்டை டிரைவர் சக்திவேல் 52, ஓட்டி வந்தார்.
சேறும், சகதியுமாக உள்ள அச்சம்பட்டி ரோட்டில் நேற்று அதிகாலை லாரி கவிழ்ந்தது. இதில் செங்கல்கள் மீது அமர்ந்து வந்த மறவன்குளம் கவிதா 48, ராமக்காள் 60, வெள்ளைத்தாய் 36, ஆகியோர் மீது செங்கல் விழுந்ததில் கவிதா இறந்தார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.