ADDED : அக் 02, 2025 03:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் குடும்பத்தினர் நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு காரில் புறப்பட்டனர். மருமகன் சரத் 38, ஓட்டினார். வாடிப்பட்டி அருகே நகரி நான்கு வழிச்சாலையில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்து அங்கிருந்த கிணற்றின் தடுப்புச் சுவரில் மோதி நின்றது. இதில் பிரேம்குமாரின் மனைவி ஆனந்தி 65, இறந்தார்.
சரத், பிரேம்குமார் 68, தப்பினர். காயமடைந்த சரத்தின் மனைவி சவுமியா 35, மகள் ஆதியா 10, மகன் அத்வித் 5, ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.