/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
/
கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
ADDED : அக் 01, 2024 05:22 AM

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சக்திவேல், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர். சமீபகாலமாக இக்கூட்டத்திற்கு வரும் யாராவது ஒருவர் தீக்குளிக்க முயன்று போலீசாருக்கு 'டென்ஷன்' ஏற்படுத்துவது வழக்கமாக உள்ளது. ஒவ்வொருவரையும் போலீசார் சோதனையிட்டு உள்ளே அனுப்புவர். சில வாரங்களாக இப்பணியில் தளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று அவனியாபுரம் ராஜம்மாள் 60, தீக்குளிக்க முயன்றார்.
தனது நிலத்தை சிலர் அபகரிக்க முயல்வதாகவும், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும் ராஜம்மாள் கூறினர். கடந்த வாரமும் இதேபோல ஒருவர் முயற்சி செய்தார். போலீஸ் அவுட்போஸ்ட் அமைத்தும் தீக்குளிக்க முயற்சிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.