நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடு கல்ச்சுரல் அகாடமி டிரஸ்ட், நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் மகளிர் திருவிழா அறக்கட்டளை நிறுவனர் குருசாமி தலைமையில் நடந்தது. டிரஸ்ட் செயலாளர் விஜயபாரதி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்கள் உயர்நீதி மன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜெயக்குமாரி, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு ஏ.எஸ்.பி., லில்லி கிரேஸ் உட்பட பல்வேறு துறைச் சார்ந்த சாதனை பெண்களுக்கு விருது வழங்கினர்.
சிறுமிகளின் கலைநிகழ்ச்சி, கராத்தே உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கினர்.
இலவச மருத்துவ முகாம், பெண்களின் சுய தொழில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. டிரஸ்டி ராமஜெயந்தி நன்றி கூறினார்.