ADDED : ஆக 08, 2025 02:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் சிவகாசி எஸ்.எப்.ஆர்., கல்லுாரியில் நடந்தது.
முதல் அரையிறுதிப் போட்டியில் லேடிடோக் கல்லுாரி 3 - 0 என்ற புள்ளிகளில் தியாகராஜர் கல்லுாரியை வீழ்த்தியது. 2வது அரையிறுதியில் விருதுநகர் வி.வி.வி., கல்லுாரி 3 - 0 என்ற புள்ளிகளில் எஸ்.எப்.ஆர்., கல்லுாரியை வீழ்த்தியது. மூன்றாமிடத்திற்கான போட்டியில் எஸ்.எப்.ஆர்., கல்லுாரி 3 - 0 புள்ளிகளில் தியாகராஜர் கல்லுாரியை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் லேடிடோக் கல்லுாரி 3 - 1 என்ற புள்ளிகளில் வி.வி.வி., கல்லுாரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற மாணவிகளை முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, உடற்கல்வி இயக்குநர்கள் சாந்தமீனா, ஹேமலதா பாராட்டினர்.