/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேரோடும் வீதியில் பூமிக்குள் மின்கம்பிகள் பதிக்கும் பணி நிறைவு சர்வீஸ் ஒயர்கள் இணைக்கும் பணி துவக்கம்

ADDED : நவ 06, 2025 05:49 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோடும் ரத வீதிகள், கிரிவல ரோடு பகுதிகளில் மின்வாரியம் சார்பில் ரூ. 1.98 கோடியில் மின் கம்பிகளை பூமிக்கு அடியில் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து, சர்வீஸ் ஒயர்களை இணைக்கும் பணி நேற்று துவங்கியது.
குன்றத்து கோயிலின் பங்குனித் திருவிழாவில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் முடிந்து மறுநாள் கோயில் முன்பு நிலை நிறுத்தியுள்ள பெரிய வைரத் தேரில் எழுந்தருளி கிரிவல ரோட்டிலும், 16 கால் மண்டபம் முன்பு நிலைநிறுத்தியுள்ள சிறிய வைர தேர், தைக் கார்த்திகை, கார்த்திகை தீபத் திருவிழா அன்று ரத வீதிகளிலும், கந்த சஷ்டி திருவிழா, வெயில் உகந்த அம்மன் கோயில் திருவிழா அன்று சட்டத்தேர் ரத வீதிகள், கிரிவீதியிலும் வலம் வரும்.
தேரோடும் இந்த வீதிகளின் மேல் பகுதியில் வீடுகள், வணிக வளாகங்களுக்கான மின் ஒயர்கள் பல இடங்களில் குறுக்காக செல்கின்றன. தேரோட்ட நாட்களில் அந்த ஒயர்களை துண்டித்துவிட்டு, தேரோட்டம் முடிந்த பின்பு மீண்டும் இணைப்பு கொடுத்து வருகின்றனர்.
இந்த பகுதிகளில் மின் ஒயர்களை பூமிக்கு அடியில் பதிப்பதற்காக உயர் அழுத்த மின் புதை வட பாதை, தாழ்வழுத்த மின் மின் புதைவட பாதையாக மாற்ற 6 மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கியது. உயர் அழுத்த மின் புதை வட பாதைக்கான பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. அப்பகுதிகளில் 111 சிறிய பில்லர் பாக்ஸ்கள், 17 நான்குவழி பில்லர் பாக்ஸ்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது ரூ. 36 லட்சத்தில் தாழ்வழுத்த மின் புதைவட பாதையாக மாற்றும் பணிகளும், அப்பகுதி வீடுகள், வணிக வளாகங்களின் சர்வீஸ் ஒயர்களை பில்லர் பாக்ஸ்களில் இணைக்கும் பணியும் நேற்று பூமி பூஜையுடன் துவங்கியது. உதவி பொறியாளர் சுமங்களாதேவி துவக்கி வைத்தார். மூன்று மாதத்தில் பணிகள் நிறைவடைய உள்ளது.