ADDED : மார் 27, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு சார்பில் கலைஞர் கைவினை திட்டத்தின் மூலம் கைவினைப் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு மானியத்துடன்கூடிய கடனுதவி வழங்க விளாச்சேரியில் பொம்மை தொழிலாளர்கள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
மூத்த கைவினை கலைஞர் ராமலிங்கம் கூறியதாவது: பொம்மை உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் 18 - 45 வயதுள்ளவர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை ரூ. 50 ஆயிரம் மானியத்துடன் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக விளாச்சேரியிலுள்ள பொம்மை உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கணக்கெடுக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. கடனுதவி பெற பாஸ்போர்ட் போட்டோ, ஆதார், இருப்பிடச் சான்றிதழ், ஸ்மார்ட் கார்டு, வருமானச் சான்றிதழ் அவசியம். கணக்கெடுப்பு முடிந்தவுடன் பட்டியல் மாவட்ட தொழில் மையத்திற்கு பரிந்துரைக்கப்படும் என்றார்.