ADDED : நவ 04, 2024 05:47 AM
மதுரை : மதுரை நகர் பா.ஜ., சார்பில் மாவட்ட தேர்தல் குழு பயிலரங்கம் நேற்று நடந்தது.
தலைவர் மகாசுசீந்திரன் தலைமை வகித்தார். இதில் பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்கபெருமாள், ஊடகப்பிரிவு மாநில துணைத் செயலாளர் விஷ்ணுபிரசாத், விவசாய பிரிவு நிர்வாகி சசிராமன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்று ஆலோசனை வழங்கினார், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும். ஓட்டுச்சாவடிக்கு குறைந்தது 50 பேரை புதிதாக சேர்க்க வேண்டும் என்பது உட்பட ஆலோசனை தெரிவித்தனர்.
திருமங்கலத்தில் நடந்த பயிலரங்கிற்கு மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி மாவட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், உறுப்பினர் சேர்க்கை பார்வையாளர் கஜேந்திரன், தேர்தல் பொறுப்பாளர்கள் மாரிசக்ரவர்த்தி, பொதுச் செயலாளர்கள் இன்பராணி, சிவலிங்கம், மாவட்ட துணைத் தலைவர் வாசுதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.