ADDED : செப் 20, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் உலக வங்கி நிதியுதவியின் கீழ் செயல்படும் அலங்காநல்லுார் பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை உலக வங்கி அதிகாரிகள் குழு நிர்வாகி சாருலதா ஷர்மா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
சி.இ.ஓ., ராஜபாண்டி நிறுவனத்தின் செயல்பாடுகளை அதிகாரிகளிடம் விளக்கினார். டி.என்.ஐ.ஏ.எம்.பி., திட்ட பயனாளர் பிரபஞ்சனின் மரச்செக்கு எண்ணெய்யை அதிகாாரிகள் ஆய்வு செய்தனர். துணை இயக்குநர் மெர்ஸி ஜெயராணி, வேளாண் அலுவலர்கள் சித்தார்த், மீனா உடனிருந்தனர்.