sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உலக இதய தினம் பேஸ்மேக்கர் - இதயம் காக்கும் நண்பன்

/

உலக இதய தினம் பேஸ்மேக்கர் - இதயம் காக்கும் நண்பன்

உலக இதய தினம் பேஸ்மேக்கர் - இதயம் காக்கும் நண்பன்

உலக இதய தினம் பேஸ்மேக்கர் - இதயம் காக்கும் நண்பன்


ADDED : செப் 29, 2025 05:35 AM

Google News

ADDED : செப் 29, 2025 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேஸ்மேக்கர் பொருத்துதல் என்றால் என்ன பேஸ்மேக்கர், மார்பு அல்லது அடிவயிற்றில் வைக்கப்படும் ஒரு சிறிய சாதனம். இதயத்துடிப்பை நீண்டகாலம் சீராக இயங்க வைக்க, உடலில் பொருத்தப்படுகிறது. வழக்கத்திற்கு மாறான இதய துடிப்பு ஏற்படும் போது, இயல்பாக துடிக்க வைக்க பேஸ்மேக்கர் பயன்படுகிறது.

இதயத்தின் மின் அமைப்பு ஆரோக்கியமான இதயத்துடிப்பு, சினோட்ரியல் முனை (எஸ்.ஏ.,) எனப்படும் இயற்கையான மின் துாண்டுதல் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. வயது மூப்பால் இதய மின் அமைப்பு சரியாக செயல்படாதபோது, இதயம் ஒழுங்கற்ற முறையில் துடிக்கலாம். இந்த நிலை ஆங்கிலத்தில் 'அரித்மியா' (Arrhythmia) எனப்படும்.

நிரந்தர பேஸ்மேக்கர் எப்போது தேவை 'பிராடி கார்டியா' எனப்படும் மெதுவான இதயதுடிப்பு, இதயத்தின் மின் கடத்தலில் சிக்கல், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, சோர்வு, மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளால் நிரந்தர பேஸ்மேக்கர் தேவை ஏற்படுகிறது.

பேஸ்மேக்கர் வகைகள் எவை:

1. ஒற்றை அறை பேஸ்மேக்கர்

இதயத்தின் மேலறை அல்லது கீழறை, இரண்டில் ஏதாவது ஒன்றில் மட்டும் வேகக் கட்டுப்பாடு தேவைப்படும்போது இந்த வகை பேஸ்மேக்கர்கள் பயன்படுத்தப்படும். இவை வலது ஏட்ரியம் (மேலறை) அல்லது இதயத்தின் வலது வென்ட்ரிகளுக்கு (கீழறை) சீரான மின்துாண்டுதல்களை அனுப்புகின்றன.

2. இரட்டை அறை பேஸ்மேக்கர்கள்

இவை இதயத்தின் மேலறை, கீழறைகளின் சுருக்கங்களை ஒருங்கிணைத்து சீரான இதய துடிப்பை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை ஒரே நேரத்தில் இதயத்தின் மேலறை, கீழறை இரண்டிலும் துடிப்பின் வேகத்தை சரிசெய்து அவற்றின் செயல்பாட்டை ஒருங்கிணைக்க முடியும்.

3. பைவென்ட்ரிகுலர் பேஸ்மேக்கர்ஸ்

இதய செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு 'C.R.T.,' எனப்படும் இவை பயன்படுத்தப்படுகிறது. இதயத்தின் கீழ் அறைகளுக்கு இடையே மின்தகவல்களை ஒருங்கிணைத்து இதயத்தை சீராக இயங்க உதவுகின்றன.

பேஸ்மேக்கர் வாழ்க்கை பேஸ்மேக்கர் பொருத்தியபிறகு, நோயாளிகள் சில மாற்றங்களுடன் அன்றாட வாழ்வைத் தொடரலாம். பேஸ்மேக்கரின் செயல்பாட்டில் குறுக்கிடும் குறிப்பிட்ட மின் சாதன உபகரணங்களைத் தவிர்க்க வேண்டும். எம்.ஆர்.ஐ., இயந்திரங்கள் பேஸ்மேக்கர் செயல்பாட்டை பாதிக்கக்கூடும். ஆண்டுக்கு ஒரு முறை பேஸ்மேக்கரின் செயல்பாடு, பேட்டரியின் ஆயுளை இதய மருத்துவர் ஆலோசனைப்படி செய்து கொள்ள வேண்டும். பரிசோதனை நிலையங்களுக்கு செல்லும்போது பேஸ்மேக்கருக்கான அடையாள அட்டையை எடுத்துச் செல்வது அவசியம்.

- டாக்டர் ரமேஷ்

மதுரை.

82200 44608






      Dinamalar
      Follow us