ADDED : டிச 22, 2025 05:33 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் 'உள் அமைதி, உலகளாவிய நல்லிணக்கம்' தலைப்பில் உலக தியான விழா நடந்தது.
செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்து பேசுகையில், 'மனதை ஒருநிலைப்படுத்தவும் உயர்வான, பண்பட்ட வாழ்க்கை வாழவும் தியான பயிற்சி அவசியம்' என்றார்.
யோகா ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், நலன் யோகா இயக்குனர் லோகப்பிரியா, சிபி யோகாசாலா நிறுவனர் சிபி சக்கரவர்த்தி தியானப் பயிற்சி வழங்கினர். நந்தி யோகா, கவுன்சிலிங் மையத்தின் இயக்குநர் நந்தினி நன்றி கூறினார்.
