திருமங்கலம் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த மில் தொழிலாளி கோபிஸ்வரன் 37, மாற்றுத்திறனாளியான இவர் நேற்று திருமங்கலம் அல் அமீன் முஸ்லிம் பள்ளியில் மாணவர்கள் முன்பு சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான சாதனையை நிகழ்த்தினார்.
பள்ளி தாளாளர் கணவாய் பிச்சை தலைமை வகித்தார். சோழன் உலக சாதனை புத்தக தலைவர் நீலமேகம்நிமலன் முன்னிலை வகித்தார். கராத்தே மாஸ்டர் பால்பாண்டி வரவேற்றார். முதல் சாதனை நிகழ்ச்சியாக கோபிஸ்வரன் தனது இரண்டு கட்டை விரல்களை மட்டும் ஊன்றி கிடை மட்டமாக 29 நொடிகள் இருந்து சாதனையை நிகழ்த்தினார்.
அடுத்து 90 டிகிரி நிலையில் 15 தண்டால் எடுத்து சாதனை புரிந்தார். அவரது சாதனையை பாராட்டி சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. பள்ளிச் செயலாளர் சிக்கந்தர், பொருளாளர் ராஜா ரஹீம், தலைமையாசிரியர்கள் லதா, ரியாஜ் பர்வீன் உட்பட பலர் பங்கேற்றனர். நடுவர்களாக ஆர்த்தி நிமலன், பெருமாள், நீலன்தமிழ்குமரன் இருந்தனர்.