நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவேடகத்தில் 14வது பட்டாலியன் தேசிய மாணவர் படை சார்பில் உலக நதிகள் தினத்தை முன்னிட்டு வைகையை சுத்தம் செய்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
விவேகானந்தா கல்லுாரி, மேல்நிலைப்பள்ளி, கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரியைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட என்.சி.சி., மாணவர்கள் திருவேடகம் வைகையாற்றை சுத்தம் செய்து தண்ணீரின் அவசியம், மழைநீர் சேகரிப்பு குறித்த பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
லெப்டினன்ட் கர்னல் ஜெகதீசன் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர்கள் கார்த்திகேயன், அன்பரசு, பள்ளித் தலைமை ஆசிரியர் மாதவன், கேப்டன் ராஜேந்திரன், லெப்டினன்ட் ஆரோக்கிய மரியமைக்கேல் ராஜ், முதன்மை அதிகாரி சித்திரவேல் ஏடகநாதர் கோயில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.