/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கட்டு மைதானத்தில் உலக சுற்றுலா தினவிழா
/
ஜல்லிக்கட்டு மைதானத்தில் உலக சுற்றுலா தினவிழா
ADDED : செப் 28, 2024 04:21 AM

அலங்காநல்லுார், : அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் உலக சுற்றுலா தினவிழா நிகழ்ச்சி நடக்கிறது. வெங்கடேசன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீ பாலமுருகன் வரவேற்றார்.
உலக சுற்றுலா தினம் குறித்து கல்லுாரி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி, கலைநிகழ்ச்சி, பரதம், தோற்பாவை கூத்து, மல்லர் கம்பம், இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது. கலை பண்பாட்டுத்துறை அரசு இசைக்கல்லுாரி மற்றும் சென்னை யாமினி பரதநாட்டிய குழுவினர், பாண்டியன் குழுவினரின் நிகழ்ச்சி நடந்தது. நாணயம் மற்றும் மூங்கில் பொருட்கள் கண்காட்சி நடந்தது.