/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குறைதீர் கூட்டத்தில் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் இல்லாததால் கவலை
/
குறைதீர் கூட்டத்தில் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் இல்லாததால் கவலை
குறைதீர் கூட்டத்தில் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் இல்லாததால் கவலை
குறைதீர் கூட்டத்தில் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் இல்லாததால் கவலை
ADDED : பிப் 14, 2024 05:21 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயம் தொடர்பான கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
உசிலம்பட்டி தாலுகாவில் துணைத்தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. 58 கிராம கால்வாய் மூலம் அல்லிகுண்டம், மானுாத்து கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்லம்பட்டி ஒன்றியத்தில் மகளிர் குழுக்கள் மூலம் கடனுதவி பெற லஞ்சம் கேட்கின்றனர். திம்மநத்தம் பகுதி மாயாண்டி ஊருணியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் போன்றவற்றை முன்வைத்து பேசினர். தொடர்ந்து ரோடு, குடிநீர், ஆக்கிரமிப்பு என பொதுவான குறைகளை கேள்விகளாக எழுப்பினர்.
விவசாயிகள், 'முந்தைய கூட்டங்களில் அரசு திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கமளிப்பர். சில மாதங்களாக விவசாய சங்கத்தைச் சேர்ந்த சிலர், விவசாய கேள்விகளை முன்வைக்காமல், அரசியல், பொது விவகாரங்களை பேசுகின்றனர். இதனால் விவசாயம் தொடர்பான பிரச்னைகள் அதிகாரிகளின் கவனத்திற்கு வராமலேயே போகிறது. இதைதவிர்க்க விவசாயம் சார்ந்த குறைகளை மட்டும் கோரிக்கைகளாக முன்வைக்க வேண்டும்' என அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

