/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இயல்பாக கதை பேச வேண்டும் எழுத்தாளர் சரவணன் பேச்சு
/
இயல்பாக கதை பேச வேண்டும் எழுத்தாளர் சரவணன் பேச்சு
ADDED : ஆக 03, 2025 04:35 AM

மதுரை : 'ஒற்றைச் சிறகு ஓவியா' புத்தகம் எழுதிய எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், த.மு.எ.க.ச., மதுரை மாவட்டம் டாக்டர் செல்வராஜ் கிளை, அமைதிச் சங்கம் சார்பில் காந்தி மியூசியத்தில் பாராட்டு விழா நடந்தது. காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார்.
விஷ்ணுபுரம் சரவணன் பேசியதாவது: நல்ல கருத்துக்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். விமர்சனம் தேவை.
கதை சொல்வதை அதை சொல்கிறோம் என்பதை தெரியாத வகையில் சொல்ல வேண்டும். அனுபவித்து கூற வேண்டும். இயல்பாக பேச வேண்டும். கதை கேட்பதில் வயது வித்தியாசம் இல்லை என்றார். கிளை செயலாளர் சாந்தி, தலைவர் சரவணன், எழுத்தாளர்கள் லிபி ஆரண்யா, சிவா, ஆசிரியர்கள் சுலேகா பானு, சித்ரா, அமுதா செல்வி பேசினர்.