/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் கோயிலில் யாகசாலை பணி துவக்கம்
/
திருப்பரங்குன்றம் கோயிலில் யாகசாலை பணி துவக்கம்
ADDED : ஜூன் 22, 2025 03:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை அமைக்கும் பணிகள் துவங்கியது.
கோயிலில் ஜூலை 7ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. கோவர்த்தனாம்பிகை அம்பாள் விமானம், வல்லப கணபதி விமானம், உற்ஸவர் சன்னதியில் பணிகள் நிறைவடைந்தன. ராஜகோபுரம், கோயிலுக்குள் உள்ள மண்டபங்களில் பணிகள் நடக்கிறது. கும்பாபிஷேக பூர்வாங்க பூஜை ஜூலை 4ல் நடக்கிறது. அதற்காக கோயில் வளாகத்தில் வள்ளி தேவசேனா மண்டபங்கள் எதிரே யாகசாலை அமைக்கும் பணி துவங்கியது.
யாகசாலையில் 75 யாக குண்டங்களும், 40 வேதிகைகளும் அமைக்கப்பட உள்ளது.