ADDED : ஏப் 16, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் :  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயில்களான அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயில்,  பாம்பலம்மன் கோயில்களில் நேற்று யாகசாலை பூஜை துவங்கியது. காலையில் பூர்வாங்க பூஜையும், மாலையில் மூலவர்கள் சக்தி புனித நீர் கலசத்தில் கலையிறக்கம் செய்யப்பட்டு யாக சாலையில் வைத்து பூஜை துவங்கியது.
இன்று காலை 9:30 முதல் காலை 11:30  மணிக்குள் சொக்கநாதர் கோயில், பழநி ஆண்டவர் கோயில், பாம்பலம்மன் கோயில், அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

