/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டி.வி.எஸ்., பள்ளியில் யோகா விழிப்புணர்வு
/
டி.வி.எஸ்., பள்ளியில் யோகா விழிப்புணர்வு
ADDED : ஜூன் 20, 2025 03:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஆயுஷ் அமைச்சகம், டி.வி.எஸ்., நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டங்களை செயல்படுத்திவரும் ஆரோக்யா நலவாழ்வு அறக்கட்டளை இணைந்து டி,வி,எஸ்,, பள்ளியில் யோகா விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தின.
'ஒரு தேசம், ஒரு தேகம்' என்ற கருப்பொருளின் அடிப்படையில் யோகா பயிற்சிகளை கொங்கு நேச்சுரோபதி கல்லூரி மருத்துவர்கள் வெங்கடேசன், செல்வமீனாட்சி மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக அறக்கட்டளையின் அறங்காவலர் வெங்கட்நாராயணன், பள்ளி முதல்வர் அருணாகுமாரி, திட்ட தலைவர் ஜான்டேவிட் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியர்கள், அறக்கட்டளை ஊழியர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.