
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் ஒரு மாதகால யோகா பயிற்சி ஜூலை 2ல் துவங்குகிறது.
தெப்பக்குளம் கீதாநடன கோபால நாயகி மந்திரில் தினமும் காலை 6:00 முதல் 7:00 மணி வரை நடக்கும் இப்பயிற்சியில் எல்லா வயதினரும் எளிதாக செய்யக்கூடிய யோகா ஆசனங்கள், பிராணாயாமம், தியானம், ஓய்வு உத்திகள் பயிற்றுவிக்கப்படும்.
பெண்களுக்கு மட்டும் தினமும் காலை 10:30 முதல் 11:30 மணி வரை தெப்பக்குளம் டாக்டர் கோகுல்நாத் பாலாஜி நர்சிங் ஹோமில் நடக்கும். உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய், சுவாசப் பிரச்னைகள், மூட்டுவலி, முதுகுவலி, கழுத்துவலி, கருப்பை, ஹார்மோன் கோளாறுகள், உடல் பருமன், மன அழுத்தம் பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவும்.
முன்பதிவுக்கு இயக்குநர் கே.பி. கங்காதரனை 88834 21666ல் தொடர்பு கொள்ளலாம்.