ADDED : ஆக 04, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் அனைத்து வயதினருக்குமான ஒரு மாத யோகப் பயிற்சி ஆக., 6ல் துவங்குகிறது.
ரத்த அழுத்தம், நீரிழிவு, சுவாசப் பிரச்னைகள், மூட்டுவலி, முதுகுவலி, கழுத்துவலி, கருப்பை, ஹார்மோன் கோளாறுகள், உடல் பருமன், மன அழுத்தம் போன்றவற்றுக்கு யோகப் பயிற்சிகள் மூலம் தீர்வு காணப்படுகிறது.
தெப்பக்குளம் கீதா நடன கோபால நாயகி மந்திரில் தினமும் காலை 6:00 முதல் 7:00 மணி வரை இருபாலருக்கும், அதேபகுதி டாக்டர் கோகுல்நாத் பாலாஜி நர்ஸிங் ஹோமில் காலை 10:30 முதல் 11:30 வரை பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. எளிய ஆசனங்கள், பிராணயாமம், தியானம், ஓய்வு உத்திகள் கற்றுத் தரப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய நிறுவன இயக்குநர் கங்காதரனை 88834 21666ல் தொடர்புகொள்ளலாம்.