நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் யோகா, இயற்கை வாழ்வியல் குறித்து செயலாளர் நந்தாராவ் தலைமையில் கருத்தரங்கு நடந்தது.
மாணவி முத்துசெல்வி வரவேற்றார். கல்வி அலுவலர் நடராஜன் வாழ்த்துரை வழங்கினார். ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் பேசுகையில், ''இயற்கை சார்ந்த வாழ்க்கை வாழ கற்றுக் கொள்ள வேண்டும். துரித உணவுகளை தவிர்த்து நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் இயற்கை உணவுகளான பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்'' என்றார்.
யோகா ஆசிரியர் பழனிக்குமார், மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார். மாணவர் அன்னாவிமாடன் நன்றி கூறினார். இணை பேராசிரியர் பாலாஜி, கல்லுாரி ஓய்வு அலுவலர் கனகராஜ், ஆய்வு மாணவர்கள் பங்கேற்றனர்.